Thursday, June 25, 2009

காதல் ரோஜாவே!...


காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண் மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல்.. சொல்

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்.

...........காதல் ரோஜாவே..........

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல்..சொல்.

...........காதல் ரோஜாவே............

இதையும் கேளுங்க...


2 comments:

johannes said...

Can You please tell me what does
புள்ளியாகத் தேய்ந்து போ
mean in English language?

johannes said...

Can You please tell me what does
புள்ளியாகத் தேய்ந்து போ
mean in English language?