Monday, August 31, 2009

தொடத்தொட மலர்ந்ததென்ன!..

புகைப்படத்திற்கு நன்றி SPB INDIA BLOG

இரு கிராமங்களுக்கிடையே நடக்கும் சாதி பிரச்சினையை கதைக் கருவாக கொண்டு அமைந்த திரைப்படம் இது. சுஹாசினி இயக்கத்தில் அவரின் உறவினரான அனு ஹாசன் நடிப்பில் 1995 வெளிவந்தது. அனுஹாசன் வெகுளி கிராமத்துப் பெண்ணாக அசத்தியிருப்பார் - கலை வம்சமாச்சே!.. நம்ம அரவிந்த் சாமியும் அவர் பங்குக்கு அசத்தியிருப்பார்!.. இதே படத்தில் நம் தலைவரும் சீர்காழி அய்யாவும் இணைந்து ஓடக்கார மாரிமுத்துவில் கலக்கியிருப்பார்கள்! .. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மெலோடியான இசையில் நம் பாலு மற்றும் சித்ரா-வின் கொஞ்சும் குரலில் மென்மையான மயிலிரகினை கொண்டு வருடியது போல் மனதிற்கு இதமாய் அமைந்திருக்கும் "தொட தொட மலர்ந்ததென்ன" எனத் தொடங்கும் இப்பாடல்!.. இப்பாடலின் இடையில் வரும் 'BGM' எனப்படும் பின்னணி இசையில் தன் விசிலை பதிவுச் செய்து ரகுமான் அசத்தியிருப்பதை குறித்து நம் பாலுவே வியந்து கூறியிருப்பார்!..

>>நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன<< இந்த வரியினை பாடும் போது சின்ன குயில் தன் குரலில் நடுக்கத்தை கொண்டு வந்திருப்பார் பாருங்கள்!.. அப்பா கேட்க பல காதுகள் வேண்டும்!..


வீடியோவும் ரொம்ப மென்மையா அமைஞ்சிருச்சு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!..


படம்: இந்திரா
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: எஸ்.பி.பி., சித்ரா
வரிகள்: வைரமுத்து
இயக்கம்: சுஹாசினி
தயாரிப்பு: மணிரத்னம்
நடிப்பு: அரவிந்த் சாமி, அனுஹாசன், நாசர், ராதாரவி
வருடம்: 1995
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

(தொடத்தொட!..)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன?
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன?

(தொடத்தொட!..)

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொடத்தொட!..)


Thoda Thoda Pyaar HoGaya-Hindi Version of This Song!..

புயலை பாராட்டும் நிலா!..Saturday, August 29, 2009

கடவுள் அமைத்து வைத்த மேடை!..


படம்:- அவள் ஒரு தொடர்கதை
பாடியவர்கள்:- எஸ்.பி.ப., சாய்பாபா
இசை:- எம்.எஸ்.வி.
நடிப்பு: கமல், சுஜாதா, விஜயகுமார்

Get this widget | Track details | eSnips Social DNA


கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
ஹெஹெஹே ஆஹாஆ ம்ம்ம்ம் லாலாலா
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

(கடவுள் அமைத்து...)


நானொரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே
அந்த அற்புத வனத்தினிலே
ஆண் கிளி இரண்டுண்டு
பெண் கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதில் ஒரு பெண் கிளி
அதனிடம் ஆண் கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே! ஆருயிரே! என் அத்தானே!

(கடவுள் அமைத்து....)

கொட்டும் முழக்கங்கள்
கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
கொட்டும் முழக்கங்கள்
கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில்
சீர் கொண்டு வந்ததமா
தேன் மொழி மங்கையர்
யாழ் இசை மீட்டிட
ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு சங்கீத தத்தைகள்
சங்கீதம் பாடுதம்மா

(கடவுள் அமைத்து....)

கன்றோடு பசு வந்து
கல்யாண பெண் பார்த்து
வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வெ
ன்டு பிள்ளைகள்
போல் வந்த முயல்கள்
ஆங்கிலம் பாடுதம்மா
wish u well happy life
happy happy married life
பண்பான வேதத்தை
கொண்டாடும் மான்கள்
மந்திரம்
துதம்மா
பண்பான வேதத்தை
கொண்டாடும் மான்கள்
மந்திரம்
துதம்மா
பல்லக்கு தூக்கிடும்
பரிவட்ட யானைகள்
பல்லாண்டு பாடுதம்மா

(கடவுள் அமைத்து....)


ஒரு கிளி கையோடு
ஒரு கிளி கை சேர்த்து
உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்கையை
உறவுக்கு கொடுத்திட்ட
ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண்கிளி
தப்பாக நினைத்து
அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல
கிணற்று தவளை தான்
இபோது தெரிந்ததம்மா

(கடவுள் அமைத்து....)

Wednesday, August 26, 2009

காலை நேரப் பூங்குயில்!..

25-08-2009 அன்று பிறந்தநாள் கண்ட நம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!...

படம்: அம்மன் கோவில் கிழக்காலே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
நடிப்பு: ராதா, விஜயகாந்த்
வருடம்:
1986
ஆஆஆஆஆஆஆஆஅ!.........
காலை நேரப் பூங்குயில்
கவிதை பாடத் தூண்டுதே
களைந்து போகும் மேகங்கள்
கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே
கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆ ஆ ஆ!..

(காலை நேரப்....)

மேடை போடும் பௌர்ணமி
ஆடிப் பாடும் ஓர் நதி (2)
வெள்ள ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை

புதிய மேகம் கவிதை பாடும் (2)
பூபாளம் பாடாமல்
எந்தன் காலைத் தோன்றும் எந்நாளும்!..

(காலை நேரப்....)

இளமை என்னும் மோகனம்
இணைந்து பாடும் என் மனம் (2)
பட்டு விரித்தது புல்வெளி
பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல் (2)
காற்றோடும் ஆற்றோடும்
இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்!..

(காலை நேரப்....)

Monday, August 24, 2009

ஜூனியர்!ஜூனியர்!ஜூனியர்!..கூர்ந்து கவனித்தால் மட்டும் உதடுகள் மிக லேசாக அசைவதைக் கண்டுபிடிக்கமுடியும் வெண்ட்ரிலோக்யுஸம் (ventriloquism) என்ற கலையைப் பழகக் கடுமையான பயிற்சிகள் தேவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழந்தைகளை எளிதாகக் கவரமுடியும் விளையாட்டு இது. அவர்கள் கவனம் முழுவதும் பொம்மைகள் மீதே இருப்பதால் நாம் வாயை பிளந்து வைத்துக்கொண்டு பேசினாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்! லேசாகப் பற்களைக் காட்டிச் சிரித்த நிலையில் வைத்துக்கொண்டு நாக்கைச் சுழட்டிப் பேசலாம். அடிக்காடி ம், ப் போன்ற உதடுகள் மூடவேண்டிய வார்த்தைகளைத் தவிர்க்கமுடிந்தால் நலம். குரலைத் தொடர்ச்சியாக மாற்றிப் பேசினால் பத்து நிமிடங்களில் தொண்டை கட்டிக் கொள்ளும். தொடர்ச்சியான பயிற்சி இருந்தால் சிறப்பாகச் செய்யமுடியும்.

கமல் வெண்ட்ரிலோக்கிஸ்ட் (ventriloquist)-ஆக நடித்திருக்கும் இந்தப் பாடலை மறக்கவே முடியாது.

பாலு பாடுவதே அழகு. சில பாடல்களில் நடுநடுவே ஒரு சிரிப்பை உதிர்ப்பார் பாருங்கள் - காதில் தேன் வந்து பாயும் என்று உணர்ந்து சொல்லலாம். அவ்வளவு இனிமையான சிரிப்பு அவருக்கு. அந்தச் சிரிப்புக்காகவே பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன என்றால் மிகையாகாது. எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன. பழைய பாடல்களில் அவர் வாய்விட்டுச் சிரித்து நான் கேட்ட பாடலில் இது முக்கியமானது. வேறு எந்தப் பாடகரும் சிரிப்பினாலும் பிரபலமானதாக எனக்குத் தெரியவில்லை!

நான் இந்த படத்தை பார்த்ததிலைங்க பாடலை பற்றிய விமர்சனம் வற்றாயிருப்பு சுந்தர் சாருடைய "பாடும் நிலா பாலு" தளத்தில் இருந்து எடுத்தது!.. நன்றி சுந்தர் சார்!!..

படம்: அவர்கள்
இசை: எம்.எஸ்.வி.
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி
நடிப்பு: கமலஹாசன், சுஜாதா, ரஜினிகாந்த்
வரிகள்: கண்ணதாசன்ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!

Yes Boss.

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்? (இரு மனம்)

இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்? (இளகிய)
கரையினிலாடும் நாணலே நீ
நாணல்? நீ? ஹிஹிஹி

கரையினிலாடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக் கொண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ?
சின்னப் பையன் வயசும் கொஞ்சும்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ?

(ஜூனியர்) (இருமனம்)

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

If it is apoorva raagam?
ம்ம்.. (சிரிப்பு)

(கடற்கரை)

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ (வயலுக்கு)

பாட்டைக் கொண்டு ராகம் போட்டேன்
நீரைக் கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக் கூடாது

No It's bad!
But I'm mad!

பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி கேட்கும்போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

(சிரிப்பு)
What.. கபகபா கபகபா?

ஜூனியர்? ஜூனியர்...ஜூனியர்...ஜூனியர்..

(இரு மனம்)

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

Boss. Love has no season; or even reason;
Shut up!

(சித்திரை)

உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்

(உதயத்தை)

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக் கூடாதோ?

It's highly idiotic!
No boss. only romantic!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்..

Sunday, August 23, 2009

ஜெய் தேவ் ஜெய் மங்கல்மூர்த்தி!..


வணக்கம் எஸ்.பி.பி. பிரியர்களே!!..

எல்லாருக்கும் முதல்ல என் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!..

இன்னைக்கு பிள்ளையார் சதுர்த்தி எல்லாரும் சாமிக்கு கொழுக்கட்டை ப
டைக்கணும்னு சொல்லி நீங்க என்ஜாய் பண்ணியிருபீங்க!.. இனிப்பான கொழுக்கட்டை சாப்பிட்டுக்கிட்டே நம் எஸ்.பி.பி.யின் தித்திக்கும் குரலில் அமைந்த கணபதியை பற்றிய இந்த "விஷ்வ விநாயகா" என்ற ஆல்பத்தில் அமைந்த பாடலை கேட்டு ரசியுங்கள்!..

அப்படியே பாலுஜி, நீங்க, நான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு பிள்ளையார்கிட்ட வேண்டிக்குங்க!..


பிள்ளையார்னா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம்
உண்மையாங்க!!..
ஏன்னா எனக்கு கூட ரொம்ப பிடிக்கும்!..
உங்களுக்கு பிடிக்குமா?


Friday, August 21, 2009

மழை தருமோ என் மேகம்!..


பாடல்: மழை தருமோ என் மேகம்
படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
பாடியவர்கள்: எஸ்.பி.பி., எஸ்.பி.ஷைலஜா
இசை: ஷ்யாம்
வருடம்: 1978
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ ]
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச்சிற்பம் தேரில் வராதோ
சிலைவண்ணம் அங்கே கலைவண்ணம் இங்கே
நிலைதன்னை சொல்ல தூதுவன் எங்கே
இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா

மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

Wednesday, August 19, 2009

அஞ்சாம் நம்பர் பஸ்!..


படம்: காலமெல்லாம் காத்திருப்பேன்
நடித்தவர்கள். விஜய், டிம்பிள்
இயக்குநர்: ஆர்.சுந்தரராஜன்
இசை: தேவா
வருடம்: 1997அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன் தந்தானக்குயிலே

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
சிவானந்தாக்காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம்
ஒன்பதுல முடிஞ்சிடும்
முன்னபின்ன போட்டதெல்லாம்
இரண்டுபக்கம் வேல வரும்

எத்தனையோ தலமுறை
சொத்து இருக்கு எங்களுக்கு
அத்தனையும் சொல்லனும்னு
தேவையில்லை உங்களூக்கு

ஆலமரம் ஆறுகுளம் எங்க பேருல
இந்த அக்கா மக கூவுவது எங்க சேவல

எங்க ஊரு ஆரு எல்லாருக்கும் சேரும்
எங்க ஊரு ஆரு எங்களுக்கும் சேரும்

ஆத்துகுள்ள நீந்தி போனா
அக்கரை போய் சேரும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

கண்ணுமணி பொன்னுமணி
கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி
எல்லாமே அத்துபடி

சுத்தமடி சுத்தமடி நான்
சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா
பக்கம் வந்து கத்துகடி

கத்து தற்றோம் கத்து தற்றோம்
கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம்
சின்னமணிக்கு

முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்
முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்

முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல
உக்காருங்க போதும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே.
முருகா..ஆஆ
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஹோய் சிவானந்தக்காலனியில் பஸ்ஸு நின்னுது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன
பொண்ணு என்னுது ஹாங்.

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

Sunday, August 16, 2009

சம்சாரம் என்பது வீணை!..


HI DEAR VIKAS!..

Be understanding of your partner’s needs.
Hold each other in the highest regard.
Have a sense of humour as you meet life’s challenges.
Honour one another when you are together or apart.
Respect each other’s differences.
Enjoy the good times, and endure the storms.
Make your dreams come true, together…
Most of all, love one another…
And you are bound to have a Happy Life!!..
-With Love & Affection
L.Mohankumar


Hi Vikas!.. Sorry for Publishing Lyrics in Tamil!!..
MUSIC HAS NO LANGUAGE BARRIER

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை வழக்கு
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

உங்கள் வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் தெரிவிக்கவும்!..

Thursday, August 13, 2009

வான் போலே வண்ணம் கொண்ட கோபாலன்!..படம்: சலங்கை ஒலி
வருடம்: 1984
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
தயாரிப்பு: நாகேஷ்வர ராவ்
இயக்கம்: விஷ்வநாத் கே
நடிப்பு: ஜெயப்ரதா, கமல் ஹாசன் & சரத் பாபு
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆ ஆஹா ஆ ஆ

(வான் போலே....)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று
செய்த லீலை பலகோடி
போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ ஆஹா ஆ ஆ

(வான் போலே...)

பெண்களுடை எடுத்தவனே
தங்கைக்குடை கொடுத்தவனே (2)
ராசலீலை புரிந்தவனே
ராஜவேலை தெரிந்தவனே
கீதை எனும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே (2)
கவிகள் உனை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆ ஆஹா ஆ ஆ

(வான் போலே...)


Photo: Thank You COVAI RAVEE Sir

Wednesday, August 12, 2009

நேற்று இன்று நாளை!..


படம்: நேற்று இன்று நாளை
வருடம்: 1974
இசை: எம்.எஸ்.வி.
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி
நடிப்பு: எம்.ஜி.ஆர். & மஞ்சுளா

ஆஆஆஆஆஅ ஆஹாஹஹா ஓ.. ஹோ ஹோ
ஆஹாஹஹா............ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!.........

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ

பேசிப்பார்ப்பதால் அந்த ஆசைத் தீருமோ
பேசிப்பார்ப்பதால் அந்த ஆசைத் தீருமோ
இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
ஆஆஆஆ நேரம் இந்த நேரம் போனால்
நெஞ்சம் ஆறுமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ

அஹா... அஹா... ஓஹோ... ஓஹோ ஒ....ஹோ ஆ..ஆ

கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
தேவை இன்னும் தேவை என்று தேடிப்பார்க்குமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ

வாங்கிக் கொடுக்கவோ
உன்னை தாங்கிக் கழிக்கவோ
வாங்கிக் கொடுக்கவோ
உன்னை தாங்கிக் கழிக்கவோ
மணி வாயும் சிவக்கவோ
அதில் நியாயம் படிக்கவோ
ஏதோ இன்பம் ஏதோ இன்பம்
இன்னும் பார்க்கவோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அது வள்ளலின் தேரோ

புகைப்படம்: நன்றி Dhool.com

Monday, August 10, 2009

சங்கீத மேகம்!..


எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
உண்மையே என் பாலு!..


படம்: உதய கீதம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
இசை: இளையராஜா
வருடம்: 1985
நடிப்பு: மோகன், ரேவதி


சங்கீத மேகம்!.. தேன் சிந்தும் நேரம்!..
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!..
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே (2)
என்றும் விழாவே என் வாழ்விலே!...

(சங்கீத மேகம்!....)

லாலலாலலா!.. லாலலாலலா!..
லாலலலாலலாலலாலாஆஆ!!..

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (2)
கேளாய் பூ மனமே!...ஓஓஓஓ!.......

(சங்கீத மேகம்!....)

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே (2)
கேளாய் பூ மனமே!...ஓஓஓஒ!..

(சங்கீத மேகம்!....)

Sunday, August 9, 2009

வைரமுத்துவின் தாய் கவிதை!..

வரிகளை நான் பதிவதை விட வைரமுத்துவின் உருக்கமான(கம்பீரமும் கலந்த) குரலில் கேளுங்கள்!..
>>>>சில இடங்களில் நான் சிலிர்த்து விட்டேன்!...
உங்களின் உணர்வுகளையும் COMMENTS-இல் தெரிவியுங்கள்!..<<<

செம்பூவே பூவே!...


படம்: சிறைச் சாலை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & சித்ரா
இயக்கம்: ப்ரியதர்ஷன்
நடிப்பு: மோகன் லால், பிரபு & தபு.
வருடம்: 1996
வரிகள்: அறிவுமதி
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
ஆடைகொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோஒஹோ !...
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோஒஹோ !...
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை
ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில்
முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில்
காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய்
நின்னருகில் வந்துநான்
சேலை நதியோரமாய்
நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும்
தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைவளை கீறியதோ

செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி
பாடிச் செல்லாதோ
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே
மின்னியது தாமரை
வண்டு தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே
சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தால் ஓராடை
சூடிக்கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே
பஞ்சணை புதையலின் ரகசியமே

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே

Thursday, August 6, 2009

குருவாயூரப்பா! குருவாயூரப்பா!...


பாடல்: குருவாயூரப்பா
படம்: புது புது அர்த்தங்கள்
வருடம்: 1989
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & சித்ரா
இசை: இளையராஜா
நடிப்பு: ரகுமான், கீதா
இயக்கம்: கே. பாலச்சந்தர்
குருவாயூரப்பா! குருவாயூரப்பா!
குருவாயூரப்பா! குருவாயூரப்பா!
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா! குருவாயூரப்பா!
வேண்டாத தெய்வமில்லை நீ தானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை (2)

(குருவாயூரப்பா! குருவாயூரப்பா!..)

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நாடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன்தான்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே

(குருவாயூரப்பா! குருவாயூரப்பா!..)

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உன்னை யார் தடுக்க

பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

(குருவாயூரப்பா! குருவாயூரப்பா!..)

Wednesday, August 5, 2009

பேசு என் அன்பே...


படம்: விடியும் வரை காத்திரு
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.பி.ஷைலஜா, B.S.சசிரேகா
அண்ணனுக்கு தங்கை சற்றும் சளைத்தவரல்ல!!....
இசை: இளையராஜா
வருடம்: 1981
இயக்கம், நடிப்பு: கே. பாக்யராஜ்
பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?
பூ நெஞ்சிலே பொன் ஊஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ
மானே மௌனமேன் மானே மௌனமேன்

பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?

நீ அணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது! துடிக்குது!
தீ அணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது! அழைக்குது!
வா வா மன்னவா!
கோடைக் காலம் வாட என்று
வாடைக் காலம் கோடை என்று
உன்னை அணைத்தேன்
மானே இதற்கு மேல்
இனியும் ஓர் விளக்கமேன்

பேசு என் அன்பே... அஹா!
உன் அன்பை... அஹா! என் என்பேன்?

மௌனமென்ற பாஷை கொண்டு
பெண் பேசுது! கண் பேசுது!
பேச பேச ஆசை நெஞ்சில்
பாலூறுது! தேன் ஊறுது!
காதல் மீறுது!...
காளை கொண்ட நாதன் என்று
மஞ்சம் கொண்ட மங்கை இன்று
சித்தம் தெளிந்தால்!
பாஆஆஆஆ!......
கண்ணா மயக்கமா கலக்கமா
நடக்குமா பயந்துட்டியா!

பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?
பூ நெஞ்சிலே பொன் ஊஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ
மன்னா மௌனமேன் கண்ணா மௌனமேன்
பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?

Tuesday, August 4, 2009

நண்பனே எனது உயிர் நண்பனே!..


படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
நடிப்பு: கமலஹாசன், சரத்பாபு, மாதவி.

123 ஏ...... ஹே.... ஏ ஹே ஹே ...........
ஏ ஹே ஹே ஏ ஹே ஹே ஹே.....ஆஆஆ!......
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது! ஹா!..
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை இன்றும் என்றும்
கேட்க வேண்டும் எனது ஆசை! ஹே!...ஹே!

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடிச் செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே!..
நமக்கு ஏது பிரித்து பார்க்க
இரண்டு மனமே! ஹே!....ஹே!

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!
லாலலா லாலலா லாலலா!
லாலலா லாலலா லாலலா!...

<<<நாலு நிமிஷம் தாங்க பாட்டு!...
அதுக்கு அப்புறம் படத்தில இருந்து ஒரு காட்சி...>>>

Sunday, August 2, 2009

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே!...


படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே ஜே யேசுதாஸ் & எஸ் பி பி
நடிப்பு: ரஜினிகாந்த், மமூட்டி, ஷோபனா....
இயக்கம்: மணிரத்னம்
வரிகள்: வாலிகாட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் (2)
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹே.....

(காட்டுக்குயிலு மனசுக்குள்ளே...)

போடா எல்லாம் விட்டுத்தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பிறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்!.
பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்!..
ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹே!..
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹே..

(காட்டுக்குயிலு மனசுக்குள்ளே...)

பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ.ஹா!..
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..
உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்..

(காட்டுக்குயிலு மனசுக்குள்ள...)

Saturday, August 1, 2009

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!..


படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
நடிப்பு: அரவிந்த் சாமி, ரேவதி, நிழல்கள் ரவி.
இயக்கம்: பாலு மகேந்திர


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும் (2)

(நலம் வாழ....)

ஒஹோ ஒ ஒஹோ ஒ ஓஒ!...
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே....

(நலம் வாழ....)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

(நலம் வாழ....)