பாடல்கள் கேட்பது மட்டும் நமது பணி அல்ல இதோ பாலுஜியின் ஆத்மார்த்தமான அன்பை பெற்ற அவரின் அனபு உள்ளங்கள் அவரால் இயன்ற அளவு பொருளுதவியுடன் கடந்த 4 வருடங்களாக நடைப்பெற்று வரும் பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் அனாதை இல்லங்கள் ஆதரவற்ற முதியோர் இல்லங்களூக்கு வருடத்திற்க்கு ஓரிருமுறை சென்று அவர்களூக்கு தேவையான பொருட்கள் வழங்கி வருவது வாடிக்கை. அதுமட்டுமல்லாமல் டாக்டர் பாலுஜி அவர்களும் கலந்து கொண்டு அவர் கையால் வழங்குவது மிகவும் சிறப்பான அம்சம். அதேபோல், இதோ இந்த மாதம் அவரின் பிறந்தநாள் 3 நாள் கழித்து 7ஆம் தேதி ஒரு ஞாயிறு அன்று சென்னையில் பூந்தமல்லியில் உள்ள, காந்திஜி மறுவாழ்வு மையத்தில் சிறுவர்களின் படிப்பிற்க்கு தேவையான பொருட்கள் வழங்கும் நற்பணி விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அவரது ரசிகர்களையும் அந்த மையத்தின் சிறுவர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆமாம் இசையன்பர்களே டாக்டர் பாலுஜி அவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இது ஒரு நீங்காத ஞாபகம் தான் நம் நெஞ்சிலே நீங்களும் கீழே புகைப்பட கண்காட்சியை கண்டு மகிழுங்கள்.
Monday, June 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Very nice Job by COVAI RAVEE SIR...
Post a Comment