Sunday, June 28, 2009

இதோ இதோ என் பல்லவி!...




இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ...
இவன் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமா
இதோ இதோ என் பல்லவி

என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா... உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே... ருசியல்லவா
அது என்று தீருமோ

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ...
இவள் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமா
இதோ இதோ என் பல்லவி

அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கைத் தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடல் ஆகினேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
நீ கீர்த்தனை... நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா....

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ...
இவள் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமா
இதோ ஹ்ம்ம்ம்
இதோ ஹ்ம்ம்ம்
என் பல்லவி ஹ்ம்ம்ம்ம்ம்ம்

1 comment:

Shamala said...

Oh my!! Lovely song. It has some emotional attachment personally to me - the movie was released in 1991 if am not mistaken, when I was 12. Sweet memories...

Keep up your good work, Mohan :)