Sunday, June 21, 2009

இளமையெனும் பூங்காற்று!..


இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமையெனும் பூங்காற்று

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தால் கேள்வி எழுமுன் விழுந்தால்
எந்த உடலோ எந்த உறவோ

இளமையெனும் பூங்காற்று

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் களைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

2 comments:

Anonymous said...

எவ்வளவு வருசம் போனாலும் மனசை கலங்கடிக்கிற பாட்டு இது. கேட்டுக்கிட்டே இருக்கலாம். வாழ்த்துக்கள்.

usha said...

wow, what a song and what a melody creamy sweet voice....i love this song,,, all time favorite of mine :)