Tuesday, June 16, 2009

கண்ணால் பேசும் பெண்ணே


கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா?
கவிதை தமிழில் கேட்டேன் என்னை மன்னிப்பாயா?
சலவை செய்த நிலவே என்னை மன்னிப்பாயா?
சிறு தவறை தவறி செய்தேன் என்னை மன்னிப்பாயா?

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி..
உனது கோவங்களும் ஏனடி?
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி..
எனது சாபங்களை தீரடி

கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன் என்னை மன்னிப்பாயா?

நிலா.. பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே! ஹா...
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில எங்கும் பிழையில்லையே.

பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது.. சப்தம் கேட்கமாட்டேன்..
மூன்றாம் பிரையினுள்ளே.. நிலவை தேட மாட்டேன்..

வாழ்வு துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

(கண்ணால் பேசும்...)

எங்கே குறுநகை எங்கே?... குறும்புகள் எங்கே? கூறடி.. ஹோ...
கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி

செல்லக்கொஞ்சல் வேண்டாம் சின்ன சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்... பாதி சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்

வாழ்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா?
ஒரு கவிதை தமிழில் கேட்டேன் என்னை மன்னிப்பாயா?
சலவை செய்த நிலவே என்னை மன்னிப்பாயா?
சிறு தவறை தவறி செய்தேன் என்னை மன்னிப்பாயா?

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி..
உனது கோவங்களும் ஏனடி?
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி..
எனது சாபங்களை தீரடி

2 comments:

Unknown said...

NICE SONG

Anonymous said...

MY FAVOURITE SONG