Wednesday, July 22, 2009

ஆயிரம் நிலவே வா!...


படம்: அடிமைப்பெண் (1969)
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம் எஸ்.பி., சுசீலா.பி
இசை: K V மகாதேவன்
வரிகள்: புலமைப்பித்தன்
நடிப்பு: ஜெயலலிதா, MGR




ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாடப் பாட

(ஆயிரம்...)

நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க...
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ

(ஆயிரம்...)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்த வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்த வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

(ஆயிரம்...)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விளக்க வேர்த்து நின்றால்
ஆஆஆ...பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
ஆஆ..தென்றல் எனும் காதலனின் கை விளக்க வேர்த்து நின்றால்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

(ஆயிரம்...)

1 comment:

Anonymous said...

எவ்ளோ வருசமானாலும் இந்த நிலவை ரசிச்சிட்டே இருக்கலாம். பதிவிற்க்கு நன்றி.