Thursday, July 2, 2009

முள்ளில்லா ரோஜா!...



முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
பொன்னைப் போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் தன்னை
அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்

மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும் (2)
ஏனென்று கேளாமல்
நான் இங்கு வந்த பெண் ஏக்கம் தீரட்டும் (2)
கண்ணுக்குள் கொஞ்சம் பாருங்கள்
என்னென்ன உண்டு கூறுங்கள்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
ஆஹாஆஆஆஆஆஆஅ.........
ஒஹோஓஓஓஓஓஓஓஒ.......

தேன் சொட்டும் கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்துப் போகுமோ (2)
மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள் மறைந்துப் போகுமோ (2)
சந்தித்தால் கொஞ்சம் தொல்லைதான்
சிந்தித்தால் இன்ப எல்லைதான்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
பொன்னை போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் தன்னை
அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
ஆஹாஆஆஆஆ.......
ஆஹாஆஆஆ........

1 comment:

Anonymous said...

ஆஹா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு மோகன் பதிவிற்க்கு நன்றி.