
படம் : நினைவெல்லாம் நித்யா
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம் (2)
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம் (2)
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
ஹெஹெ!.. இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை (2)
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளி விடும்
ஹெஹெ!.. இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்
(பனி விழும்....)
காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹா பரிகாசம் (2)
தழுவிடும் பொழுதிலே இடமாறும் இதயமே
ஹெஹெ!.. வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
(பனி விழும்...)
1 comment:
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
வாழ்த்துக்கள்
kindly remove word verification
Post a Comment