Monday, August 31, 2009

தொடத்தொட மலர்ந்ததென்ன!..

புகைப்படத்திற்கு நன்றி SPB INDIA BLOG

இரு கிராமங்களுக்கிடையே நடக்கும் சாதி பிரச்சினையை கதைக் கருவாக கொண்டு அமைந்த திரைப்படம் இது. சுஹாசினி இயக்கத்தில் அவரின் உறவினரான அனு ஹாசன் நடிப்பில் 1995 வெளிவந்தது. அனுஹாசன் வெகுளி கிராமத்துப் பெண்ணாக அசத்தியிருப்பார் - கலை வம்சமாச்சே!.. நம்ம அரவிந்த் சாமியும் அவர் பங்குக்கு அசத்தியிருப்பார்!.. இதே படத்தில் நம் தலைவரும் சீர்காழி அய்யாவும் இணைந்து ஓடக்கார மாரிமுத்துவில் கலக்கியிருப்பார்கள்! .. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் மெலோடியான இசையில் நம் பாலு மற்றும் சித்ரா-வின் கொஞ்சும் குரலில் மென்மையான மயிலிரகினை கொண்டு வருடியது போல் மனதிற்கு இதமாய் அமைந்திருக்கும் "தொட தொட மலர்ந்ததென்ன" எனத் தொடங்கும் இப்பாடல்!.. இப்பாடலின் இடையில் வரும் 'BGM' எனப்படும் பின்னணி இசையில் தன் விசிலை பதிவுச் செய்து ரகுமான் அசத்தியிருப்பதை குறித்து நம் பாலுவே வியந்து கூறியிருப்பார்!..

>>நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன<< இந்த வரியினை பாடும் போது சின்ன குயில் தன் குரலில் நடுக்கத்தை கொண்டு வந்திருப்பார் பாருங்கள்!.. அப்பா கேட்க பல காதுகள் வேண்டும்!..


வீடியோவும் ரொம்ப மென்மையா அமைஞ்சிருச்சு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!..


படம்: இந்திரா
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: எஸ்.பி.பி., சித்ரா
வரிகள்: வைரமுத்து
இயக்கம்: சுஹாசினி
தயாரிப்பு: மணிரத்னம்
நடிப்பு: அரவிந்த் சாமி, அனுஹாசன், நாசர், ராதாரவி
வருடம்: 1995
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

(தொடத்தொட!..)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன?
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன?

(தொடத்தொட!..)

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொடத்தொட!..)


Thoda Thoda Pyaar HoGaya-Hindi Version of This Song!..

புயலை பாராட்டும் நிலா!..4 comments:

usha said...

for giving this song :)

usha said...

hi mohan, thanx for giving this song :)this is my one of the fav song to view :)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in