Thursday, August 13, 2009

வான் போலே வண்ணம் கொண்ட கோபாலன்!..



படம்: சலங்கை ஒலி
வருடம்: 1984
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
தயாரிப்பு: நாகேஷ்வர ராவ்
இயக்கம்: விஷ்வநாத் கே
நடிப்பு: ஜெயப்ரதா, கமல் ஹாசன் & சரத் பாபு




வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆ ஆஹா ஆ ஆ

(வான் போலே....)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று
செய்த லீலை பலகோடி
போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ ஆஹா ஆ ஆ

(வான் போலே...)

பெண்களுடை எடுத்தவனே
தங்கைக்குடை கொடுத்தவனே (2)
ராசலீலை புரிந்தவனே
ராஜவேலை தெரிந்தவனே
கீதை எனும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே (2)
கவிகள் உனை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆ ஆஹா ஆ ஆ

(வான் போலே...)


Photo: Thank You COVAI RAVEE Sir

No comments: