Monday, August 24, 2009

ஜூனியர்!ஜூனியர்!ஜூனியர்!..



கூர்ந்து கவனித்தால் மட்டும் உதடுகள் மிக லேசாக அசைவதைக் கண்டுபிடிக்கமுடியும் வெண்ட்ரிலோக்யுஸம் (ventriloquism) என்ற கலையைப் பழகக் கடுமையான பயிற்சிகள் தேவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழந்தைகளை எளிதாகக் கவரமுடியும் விளையாட்டு இது. அவர்கள் கவனம் முழுவதும் பொம்மைகள் மீதே இருப்பதால் நாம் வாயை பிளந்து வைத்துக்கொண்டு பேசினாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்! லேசாகப் பற்களைக் காட்டிச் சிரித்த நிலையில் வைத்துக்கொண்டு நாக்கைச் சுழட்டிப் பேசலாம். அடிக்காடி ம், ப் போன்ற உதடுகள் மூடவேண்டிய வார்த்தைகளைத் தவிர்க்கமுடிந்தால் நலம். குரலைத் தொடர்ச்சியாக மாற்றிப் பேசினால் பத்து நிமிடங்களில் தொண்டை கட்டிக் கொள்ளும். தொடர்ச்சியான பயிற்சி இருந்தால் சிறப்பாகச் செய்யமுடியும்.

கமல் வெண்ட்ரிலோக்கிஸ்ட் (ventriloquist)-ஆக நடித்திருக்கும் இந்தப் பாடலை மறக்கவே முடியாது.

பாலு பாடுவதே அழகு. சில பாடல்களில் நடுநடுவே ஒரு சிரிப்பை உதிர்ப்பார் பாருங்கள் - காதில் தேன் வந்து பாயும் என்று உணர்ந்து சொல்லலாம். அவ்வளவு இனிமையான சிரிப்பு அவருக்கு. அந்தச் சிரிப்புக்காகவே பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன என்றால் மிகையாகாது. எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன. பழைய பாடல்களில் அவர் வாய்விட்டுச் சிரித்து நான் கேட்ட பாடலில் இது முக்கியமானது. வேறு எந்தப் பாடகரும் சிரிப்பினாலும் பிரபலமானதாக எனக்குத் தெரியவில்லை!

நான் இந்த படத்தை பார்த்ததிலைங்க பாடலை பற்றிய விமர்சனம் வற்றாயிருப்பு சுந்தர் சாருடைய "பாடும் நிலா பாலு" தளத்தில் இருந்து எடுத்தது!.. நன்றி சுந்தர் சார்!!..

படம்: அவர்கள்
இசை: எம்.எஸ்.வி.
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி
நடிப்பு: கமலஹாசன், சுஜாதா, ரஜினிகாந்த்
வரிகள்: கண்ணதாசன்



ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!

Yes Boss.

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்? (இரு மனம்)

இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்? (இளகிய)
கரையினிலாடும் நாணலே நீ
நாணல்? நீ? ஹிஹிஹி

கரையினிலாடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக் கொண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ?
சின்னப் பையன் வயசும் கொஞ்சும்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ?

(ஜூனியர்) (இருமனம்)

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

If it is apoorva raagam?
ம்ம்.. (சிரிப்பு)

(கடற்கரை)

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ (வயலுக்கு)

பாட்டைக் கொண்டு ராகம் போட்டேன்
நீரைக் கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக் கூடாது

No It's bad!
But I'm mad!

பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி கேட்கும்போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

(சிரிப்பு)
What.. கபகபா கபகபா?

ஜூனியர்? ஜூனியர்...ஜூனியர்...ஜூனியர்..

(இரு மனம்)

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

Boss. Love has no season; or even reason;
Shut up!

(சித்திரை)

உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்

(உதயத்தை)

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக் கூடாதோ?

It's highly idiotic!
No boss. only romantic!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்..

6 comments:

கோவி.கண்ணன் said...

எழுத்தும், கருத்தும் கோர்வையாக இருக்கிறது.

பொம்மையைப் பேச வைப்பது வியப்பான ஒன்று தான். இந்த நூற்றாண்டின் நல்லதொரு கலை.

BaaluPitthan said...

//பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி

This particuler song was by SPB & Sadhan (Mimic Artist, Assitant of MSV along with Joseph Krishna who sang "Kadavul Amithu vaitha media" along with SPB in aval oru Thodar Kadhai"). BTW, in this movie, S.Janaki sang that melodious "Kattrukkena Veli".

Anonymous said...

//நான் இந்த படத்தை பார்த்ததிலைங்க பாடலை பற்றிய விமர்சனம் வற்றாயிருப்பு சுந்தர் சாருடைய "பாடும் நிலா பாலு" தளத்தில் இருந்து எடுத்தது!.. நன்றி சுந்தர் சார்!!..//

மோகன் குமார் சிறிய வயதான படிக்கும் மாணவன் நீங்க நிச்சயம் நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை. டிவிடி எடுத்து பாருங்க அருமையான படம். எங்கோயோ படித்த மாதிரி இருக்கே என்று நினைத்தேன். வற்றாயிருப்பு காரர் தான் இந்த ஸ்டைலில் எழுதுவார் (அதுவும் கமலாயிற்றே) எத்தனை தடவை கேட்டாலும் சலிப்புதட்டாத பாடல். மறு சுழற்ச்சியில் தருகிறீர்கள். நன்றி. நன்றி.

Mohan kumar said...

Warm Welcome to கோவி.கண்ணன் sir & My Dear Baalu Pitthan Sir.. Baalu Pitthan sir unga peyare enakku romba pidichu pochu..

>>//பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.ஜானகி

This particuler song was by SPB & Sadhan (Mimic Artist, Assitant of MSV along with Joseph Krishna who sang "Kadavul Amithu vaitha media" along with SPB in aval oru Thodar Kadhai"). BTW, in this movie, S.Janaki sang that melodious "Kattrukkena Veli".<<

Thank U & Sorry Baalu Pitthan Sir... I think his name is 'SaiBaba'..

Mohan kumar said...

nandri Covai Ravee Sir!.. For posting Comments in every page which encourage me & Enjoy the songs!..

Mohan kumar said...

கண்ணதாசன் ஆச்சே கோர்வையாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை கோவி.கண்ணன் சார்!..