Sunday, August 9, 2009

செம்பூவே பூவே!...


படம்: சிறைச் சாலை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & சித்ரா
இயக்கம்: ப்ரியதர்ஷன்
நடிப்பு: மோகன் லால், பிரபு & தபு.
வருடம்: 1996
வரிகள்: அறிவுமதி




செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
ஆடைகொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோஒஹோ !...
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோஒஹோ !...
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை
ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே

அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில்
முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில்
காதல் குற்றாலம்
தேன்தெளிக்கும் தென்றலாய்
நின்னருகில் வந்துநான்
சேலை நதியோரமாய்
நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும்
தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைவளை கீறியதோ

செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே

இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி
பாடிச் செல்லாதோ
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே
மின்னியது தாமரை
வண்டு தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே
சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தால் ஓராடை
சூடிக்கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே
பஞ்சணை புதையலின் ரகசியமே

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே

3 comments:

Jawahar said...

மோகன்!

என் அதீதக் காதலுக்குரிய பாட்டு இது. இதை எம்பீத்ரீ பார்மில் என் மெயிலுக்கு அனுப்ப முடியுமா?

ஒவ்வொரு வரியும் முத்து!"முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே" என்ன கற்பனை!

அதைவிட, தபு கற்பனைக் காட்சியைப் பார்த்து வெட்கப் படும் போது அவ(ர்க)ளை அப்படியே.........ம்ம்ம் ஹூம் பெண்கள் எல்லாம் படிக்கிறார்கள்.

http://kgjawarlal.wordpress.com
kgjawarlal@yahoo.com

Mohan kumar said...

வாங்க jawarlal சார்!..
>>>>>தபு கற்பனைக் காட்சியைப் பார்த்து வெட்கப் படும் போது அவ(ர்க)ளை அப்படியே.........ம்ம்ம் ஹூம் பெண்கள் எல்லாம் படிக்கிறார்கள்<<<<
வரும்போதே இப்படித்தானா!.. ஆனாலும் குறும்பு அதிகம் உங்களுக்கு!..

Information said...

நல்ல பாடல்