Wednesday, August 5, 2009

பேசு என் அன்பே...


படம்: விடியும் வரை காத்திரு
பாடியவர்கள்: எஸ்.பி.பி. & எஸ்.பி.ஷைலஜா, B.S.சசிரேகா
அண்ணனுக்கு தங்கை சற்றும் சளைத்தவரல்ல!!....
இசை: இளையராஜா
வருடம்: 1981
இயக்கம், நடிப்பு: கே. பாக்யராஜ்




பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?
பூ நெஞ்சிலே பொன் ஊஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ
மானே மௌனமேன் மானே மௌனமேன்

பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?

நீ அணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது! துடிக்குது!
தீ அணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது! அழைக்குது!
வா வா மன்னவா!
கோடைக் காலம் வாட என்று
வாடைக் காலம் கோடை என்று
உன்னை அணைத்தேன்
மானே இதற்கு மேல்
இனியும் ஓர் விளக்கமேன்

பேசு என் அன்பே... அஹா!
உன் அன்பை... அஹா! என் என்பேன்?

மௌனமென்ற பாஷை கொண்டு
பெண் பேசுது! கண் பேசுது!
பேச பேச ஆசை நெஞ்சில்
பாலூறுது! தேன் ஊறுது!
காதல் மீறுது!...
காளை கொண்ட நாதன் என்று
மஞ்சம் கொண்ட மங்கை இன்று
சித்தம் தெளிந்தால்!
பாஆஆஆஆ!......
கண்ணா மயக்கமா கலக்கமா
நடக்குமா பயந்துட்டியா!

பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?
பூ நெஞ்சிலே பொன் ஊஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ
மன்னா மௌனமேன் கண்ணா மௌனமேன்
பேசு என் அன்பே
உன் அன்பை என் என்பேன்?

4 comments:

RG said...

The singers include B S Sashirekha in addition to SPB & SPS. Please credit her too :-)

Mohan kumar said...

நன்றி RG சார்!... பி.எஸ்.சசிரேகா பெயரையும் சேர்த்துவிட்டேன்!...

Anonymous said...

Vaanga RGN sir very nice details thx for encouraging to Mohan kumar.

ramgoby said...

nice one..