படம்: அம்மன் கோவில் கிழக்காலே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
நடிப்பு: ராதா, விஜயகாந்த்
வருடம்: 1986
ஆஆஆஆஆஆஆஆஅ!.........
காலை நேரப் பூங்குயில்
கவிதை பாடத் தூண்டுதே
களைந்து போகும் மேகங்கள்
கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே
கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆ ஆ ஆ!..
(காலை நேரப்....)
மேடை போடும் பௌர்ணமி
ஆடிப் பாடும் ஓர் நதி (2)
வெள்ள ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும் (2)
பூபாளம் பாடாமல்
எந்தன் காலைத் தோன்றும் எந்நாளு
(காலை நேரப்....)
இளமை என்னும் மோகனம்
இணைந்து பாடும் என் மனம் (2)
பட்டு விரித்தது புல்வெளி
பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல் (2)
காற்றோடும் ஆற்றோடும்
இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்!..
(காலை நேரப்....)
இனிமையான பாடலில் //பட்டு விரித்தது புல்வெளி....
ReplyDeleteபட்டுத் தெறித்தது விண்ணொளி..//
இந்த வரிகளை எப்போது கேட்டாலும் பாலுஜியின் குரல் விண்ணொளி பட்டு தண்ணீர் தெறிப்பது போன்ற உணர்வு என் மனதில் ஏற்படும். அருமை அருமை பதிவிற்க்கு நன்றி.