Friday, August 21, 2009
மழை தருமோ என் மேகம்!..
பாடல்: மழை தருமோ என் மேகம்
படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
பாடியவர்கள்: எஸ்.பி.பி., எஸ்.பி.ஷைலஜா
இசை: ஷ்யாம்
வருடம்: 1978
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ ]
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச்சிற்பம் தேரில் வராதோ
சிலைவண்ணம் அங்கே கலைவண்ணம் இங்கே
நிலைதன்னை சொல்ல தூதுவன் எங்கே
இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே
No comments:
Post a Comment