Monday, June 29, 2009

என்னவென்று சொல்வதம்மா!...



என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்லமொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

(என்னவென்று....)

தெம்மாங்குப் பாடிடும்
சின்ன விழி மீன்களோ
பொன் ஊஞ்சல் ஆடிடும்
கன்னி கரும் கூந்தலோ
பொட்டாடும் மேடைப் பார்த்து
வாடிப் போகும் வான்பிறை
முத்தாரம் மீட்டும் மார்பில்
ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப்பூவின் வாசம்
வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க
தாங்காமல் நாணுவாள்
புதுப்பூக் கோலம்தான்
காலில் போடுவாள்

(என்னவென்று...)

ஆஆஅ.....
கண்ணோரம் ஆயிரம்
காதல்கனை வீசுவாள்
முந்தா...னைச் சோலையில்
தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகமாகி
அசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும்
ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று
அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

(என்னவென்று...)

1 comment:

  1. Thanks Mr.Mohan. What a composition? What a song? SPBji's expressions superb! It is an evergreen hit.

    V. Gopalakrishnan
    Coimbatore

    ReplyDelete